டென்னிசில் இருந்து விடைபெறுகிறார் கோன்டாவெய்ட்
2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
லண்டன்,
எஸ்தோனியா நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் தற்போது தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 2-வது இடம் வரை முன்னேறியுள்ள அவர் இதுவரை 6 பட்டங்களை வென்றுள்ளார். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கால்இறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
இந்த நிலையில் 27 வயதான கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முதுகுதண்டுவட பாதிப்பால் அடிக்கடி அவதிப்படும் அவர் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே டென்னிசுக்கு முழுக்கு போடுகிறார்.
Related Tags :
Next Story