இண்டியன்வெல்ஸ் ஓபன்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்


இண்டியன்வெல்ஸ் ஓபன்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image : AFP 

ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஹங்கேரியின் பேபியன் மரோசானுடன் மோதினார்.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஹங்கேரியின் பேபியன் மரோசானுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இதில் ஸ்வரேவ் முதல் செட்டை 5-7 என இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.


Next Story