டென்னிஸ் விளையாட்டில் இருந்து நான் ஓய்வு பெறவில்லை - செரீனா வில்லியம்ஸ்


டென்னிஸ் விளையாட்டில் இருந்து நான் ஓய்வு பெறவில்லை - செரீனா வில்லியம்ஸ்
x

நான் டென்னிஸ் கோர்ட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

சான்பிரான்சிஸ்கோ,

டென்னிஸ் உலகின் தலைசிறந்த வீராங்கனைகளில் செரீனா வில்லியம்ஸ் கருதப்படுகிறார். அவர் தனது வாழ்க்கையில் மொத்தம் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார். செரீனா தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 1995 இல் தொடங்கினார். கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து டென்னிஸ் விளையாடி வருகிறார்.

41-வது வயதை எட்டும் செரீனா வில்லியம்ஸ் டென்னிசில் அதிக ஆண்டுகள் கொடிகட்டி பறந்தார். அவர் 319 வாரங்கள் ஒற்றையர் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்துள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் அலெக்சிஸ் ஒஹானியனை மணந்த செரீனாவுக்கு ஒலிம்பியா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தை பெற்ற பிறகு மீண்டும் களம் திரும்பிய செரீனாவால் அதன்பிறகு பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் கடந்த மாதம் நடந்தது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.இதனால் அவர் அமெரிக்க ஓபன் போட்டியிலிருந்து வெளியேறினார்.இதனால் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா வில்லியம்ஸ் நிறைவு செய்தார்.

இந்த நிலையில், முன்னாள் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தான் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு, செரீனாவை மீண்டும் டென்னிஸ் மைதானத்தில் காண முடியாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விரைவில் டென்னிஸ் கோர்ட்டிற்குத் திரும்பப் போவதாக திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் சான்பிரான்சிஸ்கோவில் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறுகையில், ​​'நான் ஓய்வு பெறவில்லை. நான் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். நீங்கள் என் வீட்டிற்கு வரலாம். எனது வீட்டில் டென்னிஸ் மைதானம் உள்ளது. என் வாழ்க்கையில் முதல்முறையாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. இது மிகவும் விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் நான் இப்போது வரை ஓய்வு பற்றி எதுவும் நினைக்கவில்லை என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.


Next Story