சிட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்; 2-ம் சுற்றுக்கு ஆஸ்திரேலிய வீரர் முன்னேற்றம்


சிட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர்; 2-ம் சுற்றுக்கு ஆஸ்திரேலிய வீரர் முன்னேற்றம்
x

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னனி வீரர் கிர்ஜியாஸ், அமெரிக்க வீரரை தோற்கடித்து 2-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சிட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 2-ம் சுற்றுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னனி வீரர் கிர்ஜியாஸ் முன்னேறியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் கிரிஜியாஸ், அமெரிக்க வீரர் மார்கஸ் கைரோனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-ம் சுற்றுக்குள் கிர்ஜியாஸ் நுழைந்தார்.


Next Story