சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் கால்இறுதிக்கு தகுதி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் கால்இறுதிக்கு தகுதி
x

Image Courtesy : @CincyTennis twitter

தினத்தந்தி 19 Aug 2023 6:00 AM IST (Updated: 19 Aug 2023 4:36 PM IST)
t-max-icont-min-icon

கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

சின்சினாட்டி,

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) சரிவில் இருந்து மீண்டு 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனையான சீனாவின் கின்வென் செங்கை சாய்த்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். இதேபோல் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 13-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவை (ரஷியா) விரட்டியடித்தார்.

துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியரை எதிர்த்து ஆடிய டோனா வெகிச் (குரோஷியா) முதல் செட்டில் 2-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த போதும், இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினியை எதிர்த்து ஆடிய எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 6-4, 2-5 என்ற கணக்கில் இருந்த நிலையிலும் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினர். இதனால் ஆன்ஸ் ஜாபியர், ஜாஸ்மின் பாவ்லினி ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

இதே போல் செக்குடியரசு வீராங்கனைகள் கரோலினா முச்சோவா 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியையும் (கிரீஸ்), வோன்ட்ரோசோவா 7-5, 6-3 என்ற நேர்செட்டில் ஸ்லோன் ஸ்டீபனையும் (அமெரிக்கா), மேரி போஸ்கோவா 6-4, 6-0 என்ற நேர்செட்டில் ஜெசிகா பெகுலாவையும் (அமெரிக்கா), அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் நோஸ்கோவாவையும்(செக்குடியரசு) தோற்கடித்தனர்.


Next Story