சீனா ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட அரினா சபலென்கா

Image Courtesy: AFP
அரினா சபலென்கா (பெலாரஸ்) - செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
பீஜிங்,
சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கரோலினா முச்சோவாவும், ஆட்டத்தின் 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அரினா சபலென்காவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.
இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் அபாரமாக செயல்பட்ட கரோலினா முச்சோவா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அரினா சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட சபலென்கா தொடரில் இருந்து வெளியேறினார்.
Related Tags :
Next Story