சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: சுமித் நாகல் கால்இறுதிக்கு தகுதி


சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: சுமித் நாகல் கால்இறுதிக்கு தகுதி
x

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் சுமித் நாகல் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

சென்னை,

சென்னை ஓபன் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 506-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் ஜாசன் ஜங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சுமித் நாகல் கால்இறுதியில் ஜாய் கிளார்க்கை (இங்கிலாந்து) சந்திக்கிறார்.

இதேபோல் மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த் 6-2, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் ஹமாத் மெட்ஜிடோவிச்சையும் (செர்பியா), ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் புர்செல் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் பீட்டர் நோய்ஜாவையும் (செக்குடியரசு), இங்கிலாந்து வீரர் ஜாய் கிளார்க் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் டிமிடார் குஸ்மனோவையும் (பல்கேரியா) விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தனர்.

இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7-6 (7-5), 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டவரான சுமித் நாகல்-முகுந்த் சசிகுமார் இணையை தோற்கடித்து அரைஇறுதியை எட்டியது. மற்றொரு ஆட்டத்தில் ஜாய் கிளார்க் (இங்கிலாந்து)-அர்ஜூன் காதே (இந்தியா) இணை 1-6, 7-6 (10-8), 10-8 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் ஜிசுங் நாம்-மின்கு சோங் ஜோடியை வெளியேற்றி அரைஇறுதியை எட்டியது. மற்ற ஆட்டங்களில் செக்குடியரசின் பீட்டர் நோய்ஜா-ஆன்ட்ரூ பால்சன், செபாஸ்டியன் ஆப்னெர் (ஆஸ்திரியா)-நினோ செர்தாருசிச் (குரோஷியா) ஆகிய ஜோடிகளும் வெற்றி பெற்றன.


Next Story