ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; அரையிறுதிக்கு முன்னேறிய அரினா சபலென்கா

Image Courtesy: @AustralianOpen
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலெங்கா, செக் வீராங்கனையான பார்போரா கிரெஜிகோவாவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆடம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பார்போரா கிரெஜிகோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரினா சபலென்கா அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொள்கிறார்.
Related Tags :
Next Story