ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர்களின் ஆதிக்கம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:  அமெரிக்க வீரர்களின் ஆதிக்கம்
x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை தரவரிசையில் 2-ம் நிலை வீரரை வீழ்த்தி உள்ளார்.



மெல்போர்ன்,


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ந்தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இதில், ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று போட்டி ஒன்றில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பை மற்றும் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் ஆகியோர் இன்று விளையாடினர்.

இந்த போட்டியில், அதிரடியாக விளையாடிய ஜென்சன் 6-3, 7-5, 6-7 (4), 6-2 என்ற செட் கணக்கில் கேஸ்பரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீரர்களின் ஆதிக்கம் நீடிக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த 22 வயதுடைய ஜென்சன், 2-வது நிலை வீரரை இன்று வீழ்த்தியது போன்றே, இதே டென்னிஸ் கோர்ட்டில் நேற்று நடந்த போட்டியில் மற்றொரு அமெரிக்க வீரரும் சாதனை படைத்து உள்ளார்.

27 வயது கொண்ட அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டு, நடப்பு சாம்பியன் ரபேல் நடாலை நேற்று 2-வது சுற்று போட்டியில் எதிர் கொண்டு விளையாடினார். அதில், 2 மணிநேரம் மற்றும் 32 நிமிடங்கள் விளையாடி 4-6, 4-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் நடாலை, மெக்கன்சி வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அடுத்தடுத்து, முன்னணியில் உள்ள இரண்டு வீரர்களை அமெரிக்க இளம் வீரர்கள் தொடர்ச்சியாக வீழ்த்தி உள்ளது ரசிகர்களிடையே பரபரப்புடன் பார்க்கப்படுகிறது.


Next Story