ஆசிய டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் வெற்றி


ஆசிய டேபிள் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் வெற்றி
x
தினத்தந்தி 8 Sept 2023 1:00 AM IST (Updated: 8 Sept 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது.

யோங்க் சாங்,

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 104-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி 10-12, 11-8, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சு யு சென்னினை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். தாய்லாந்தின் ஜினிபாவை எதிர்கொள்ள இருந்த இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா கடைசி நேரத்தில் விலகினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அஹிகா முகர்ஜி 11-2, 11-0, 11-1 என்ற நேர்செட்டில் நேபாளத்தின் சுவால் சிக்காவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா 5-11, 6-11, 9-11 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஜப்பானின் மிமா இடோவிடம் பணிந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மானவ் தாக்கர்-மானுஷ் ஷா ஜோடி 11-7, 11-7, 11-8 என்ற நேர்செட்டில் உஸ்பெகிஸ்தானின் அப்துல்லா அனோர்போவ்-குத்பிடில்லோ இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஹிகா முகர்ஜி-சுதிர்தா முகர்ஜி இணை 11-1, 13-11, 10-12, 11-7 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ஏஞ்சலினா ரோமானோவ்ஸ்கயா-சர்வினோஸ் மிர்காடிரோவ் ஜோடியை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது.


Next Story