17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்; 32 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவுக்கு தங்கம்
இத்தாலி நாட்டில் நடந்து வரும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
ரோம்,
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர் சுராஜ் வஷிஷ்த், ஐரோப்பிய சாம்பியனான பரைம் முஸ்தபாயேவ் உடன் விளையாடினார். இதில், 11-0 என்ற புள்ளி கணக்கில் சுராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
அதனுடன், இந்திய வரலாற்றில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கம் வென்றவர் என்ற சாதனையையும் சுராஜ் படைத்துள்ளார். கடந்த 1990ம் ஆண்டு பப்பு யாதவ் வெற்றி பெற்ற பின்னர், சுராஜ் தங்கம் வென்றுள்ளார்.
ஒட்டு மொத்தத்தில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இது 3வது பதக்கம் ஆகும். அனைத்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இது 4வது பதக்கம் ஆகும்.
Related Tags :
Next Story