உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு காயத்தால் ஹசரங்கா நீக்கம்
உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா மீளாததால் அவர் அணியில் இடம் பெறவில்லை. லங்கா பிரிமீயர் லீக்கில் ஆல்-ரவுண்டராக அட்டகாசப்படுத்திய ஹசரங்கா (279 ரன் மற்றும் 19 விக்கெட்) இல்லாதது இலங்கைக்கு நிச்சயம் பின்னடைவு தான். கேப்டனாக தசுன் ஷனகா நீடிக்கிறார். குசல் மென்டிஸ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி வருமாறு:- ஷனகா (கேப்டன்), குசல் மென்டிஸ், குசல் பெரேரா, நிசாங்கா, திமுத் கருணாரத்னே, சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துஷன் ஹேமந்தா, தீக்ஷனா, வெல்லாலகே, கசுன் ரஜிதா, பதிரானா, லாஹிரு குமாரா, தில்ஷன் மதுஷன்கா.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை டெல்லியில் சந்திக்கிறது. அதற்கு முன்பாக வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.