ஒலிம்பியாட் பதக்கத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் என்ன?
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பதக்கங்களை சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆலோசனையுடன் தமிழக சுற்றுலாத்துறை வடிவமைத்துள்ளது.
சென்னை,
செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கம் வழங்கப்படும். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பதக்கங்களை சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆலோசனையுடன் தமிழக சுற்றுலாத்துறை வடிவமைத்துள்ளது.
சர்வதேச தரத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பதக்கம் 110 கிராம் எடையும், 7 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டது. பதக்கத்தின் ஒரு பக்கம் மாமல்லபுரத்தின் கடற்கரை கோவிலின் சின்னமும், இன்னொரு பக்கம் செஸ் ஒலிம்பியாட்டுக்கான லோகோவும் இடம் பெற்றுள்ளது.
பதக்கத்தை இணைக்கும் ரிப்பன் தேசிய கொடியின் வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுற்றுலா துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story