5 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்
2017ம் ஆண்டுக்கு பிறகு கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார்.
செஸ் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவர் கடைசியாக தன்னுடைய உலக சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சனிடம் இழந்தார். அதன்பின்னர் கார்ல்சன் தொடர்ந்து உலக சாம்பியனாக இருந்து வருகிறார்.
நார்வேயில் தற்போது நடைபெற்றும் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் விஸ்வநாதன் ஆனந்த் பங்கேற்றுள்ளார். இவர் இந்த தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்கொண்டார். போட்டியின் 43வது நகர்வின் போது கார்ல்சன் விஸ்வநாதன் ஆனந்திடம் வீழ்ந்தார்.
அபாரமாக செயல்பட்டு கார்லசனை வீழ்த்திய ஆனந்த் இத்தொடரில் 5 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தார். 2017ம் ஆண்டுக்கு பிறகு கார்ல்சனை விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தியுள்ளார்.தொடர்ந்து இத்தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் 10 வீரர்கள் மோதும் கிளாசிக்கல் சுற்றில் விளையாடி வருகிறார்.