டாட்டா ஸ்டீல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்; பிரான்சின் மேக்சிம் வாசியர் லாக்ரவ் சாம்பியன்


டாட்டா ஸ்டீல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்; பிரான்சின் மேக்சிம் வாசியர் லாக்ரவ்  சாம்பியன்
x

கோப்புப்படம்

இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 3-வது இடத்தை பிடித்தார்.

கொல்கத்தா,

டாட்டா ஸ்டீல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்சின் மேக்சிம் வாசியர் லாக்ரவ் 7 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் (4 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி) விதித் குஜராத்தி, அலெக்சாண்டர் கிரிஷுக் ஆகியோருடன் 3-வது இடத்தை பகிர்ந்தார். மற்றொரு தமிழக வீரர் டி.குகேசுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவாக அமைந்தது. டி.குகேஷ் 4½ புள்ளிகளுடன் 6-வது இடத்தை பெற்றார்.


Next Story