மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி:- சென்னை அணி 'சாம்பியன்'


மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி:- சென்னை அணி சாம்பியன்
x

கோப்புப்படம் 

சென்னை மாவட்ட அணி 108 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 8-வது மாநில சீனியர் மற்றும் 3-வது ஜூனியர், சப்-ஜூனியர் நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் வளாகத்தில் 2 நாட்கள் நடந்தது. இதில் சென்னை மாவட்ட அணி 108 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சேலம் மாவட்ட அணி (102 புள்ளிகள்) 2-வது இடம் பெற்றது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் எஸ்.டி.ஏ.டி. பயிற்சியாளர் பாண்டியனிடம் பயிற்சி பெற்ற விஷ்ணு வர்தன் 3 தங்கப்பதக்கமும், வி.ஜி.அரவிந்த் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கமும் (சப்-ஜூனியர் பிரிவு) வென்றனர்.

பரிசளிப்பு விழாவில் ரவுண்ட் டேபிள் அமைப்பின் சென்னை தலைவர் துஷயந்த் மெஹரா, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரன் ராஜா, சென்னை தலைவர் எம்.எஸ்.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.


Next Story