சென்னையில் மாநில நீச்சல் போட்டி - இன்று தொடக்கம்
போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய சீனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
76-வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) நீச்சல் வளாகத்தில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் நடக்கிறது. தினசரி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 250 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும் தேசிய சீனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தகவலை தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் டி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story