மாநில கூடைப்பந்து போட்டி: ரைசிங் ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


மாநில கூடைப்பந்து போட்டி: ரைசிங் ஸ்டார் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x

அரைஇறுதி லீக் ஆட்டம் ஒன்றில் வருமான வரி அணி 69-58 என்ற புள்ளி கணக்கில் லயோலாவை வென்றது.

சென்னை,

மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ரைசிங் ஸ்டார் அணி 82-57 என்ற புள்ளி கணக்கில் ஜே.ஐ.டி. அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் எஸ்.பி.சி. அணி 66-39 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது.

ஆண்கள் பிரிவில் அரைஇறுதி லீக் ஆட்டம் ஒன்றில் வருமான வரி அணி 69-58 என்ற புள்ளி கணக்கில் லயோலாவை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 93-71 என்ற புள்ளி கணக்கில் ஐ.சி.எப்.பை சாய்த்து தொடர்ந்து 2-வது வெற்றியை தனதாக்கியது.


Next Story