மாநில கராத்தே போட்டிக்கான தேர்வு முகாம்


மாநில கராத்தே போட்டிக்கான தேர்வு முகாம்
x

மாநில கராத்தே போட்டிக்கான தேர்வு முகாம்

திருவாரூர்

மன்னார்குடி:

மாநில அளவிலான கராத்தே போட்டிக்கான தேர்வு முகாம் நேற்று மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கராத்தே மாஸ்டர் ராஜகோபால் தலைமை தாங்கினார். முகாமில் மாணவ, மாணவிகளுக்கு தொடர் ஓட்ட தேர்வு, உடற்பயிற்சி தேர்வு, கட்டா தேர்வு ஆகியவை நடைபெற்றது. பிளாக் பெல்டில் முதல் 5 நிலைகளுக்கு நடந்த தேர்வில் மன்னார்குடி, லெட்சுமாங்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர், மதுக்கூர், நாச்சிகுளம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, நாட்டுச்சாலை, உள்ளிக்கோட்டை, வடசேரி, மற்றும் அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 வயது முதல் 25 வயதுடைய கராத்தே மாணவர்கள் பங்கேற்றனர். முகாமில் 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வருகிற 11-ந்தேதி(சனிக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான பிளாக் பெல்ட் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். தொடர்ந்து தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தரணி கல்வி நிறுவன தலைவர் எஸ்.காமராஜ் பங்கேற்று சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இதில் தரணி மெட்ரிக் பள்ளி முதல்வர் அருள், தரணி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சாந்தசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story