இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி. உஷா போட்டி
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக பி.டி. உஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தவருமான கேரளாவை சேர்ந்த 58 வயது முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், 'சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story