இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் - விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி


இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் - விஸ்வநாதன் ஆனந்த் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 9 Aug 2022 11:52 PM IST (Updated: 10 Aug 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி கடந்த 10-நாட்களுக்கு மேல் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன் என சர்வதேச கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.


Next Story