புரோ கபடி லீக் : மும்பை அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி


புரோ கபடி லீக் : மும்பை அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
x
தினத்தந்தி 7 Oct 2022 5:32 PM GMT (Updated: 7 Oct 2022 5:37 PM GMT)

தபாங் டெல்லி, யு மும்பாவை எதிர்கொண்டது.

பெங்களூரு,

புரோ கபடி லீக் 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் கைவிடப்பட்ட இந்த போட்டி, கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கபடி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதலாவது ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, சுரிந்தர் சிங் தலைமையிலான முன்னாள் சாம்பியன் யு மும்பாவை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே டெல்லி அணி புள்ளிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முடிவில் 41- 27 என்ற கணக்கில் யூ மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.


Next Story