பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல்: இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்று சாதனை

image courtesy: Dr Mansukh Mandaviya twitter


பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார்.
சென்னை,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F-64 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில், 70.59 மீட்டர் தூரம் எறிந்து பாரா ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire