பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்


பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் - விவரம்
x

கோப்புப்படம் 

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-

பாரா கேனோ:-

ஆண்கள் கே.எல்.1 200மீ ஹீட்ஸ் - யாஷ் குமார் - மதியம் 1.30 மணி

பாரா தடகளம்:-

பெண்கள் 200மீ டி-12 சுற்று 1 - சிம்ரன் - மதியம் 1.38 மணி

பாரா கேனோ:-

பெண்கள் வி.எல்.2 200மீ ஹீட்ஸ் - பிராச்சி யாதவ் - மதியம் 1.50 மணி

பாரா தடகளம்:-

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்-54 (இறுதிப் போட்டி-பதக்க சுற்று) - திபேஷ் குமார் - மதியம் 2.07 மணி

பாரா தடகளம்:-

திலீப் காவிட் - ஆண்கள் 400மீ டி-45, டி-46, டி-47 சுற்று 1 - திலீப் காவிட் - மதியம் 2.50 மணி

பாரா கேனோ:-

பெண்கள் கே.எல்.1 200மீ ஹீட்ஸ் - பூஜா ஓஜா - மதியம் 2.55 மணி

பாரா தடகளம்:-

ஆண்கள் உயரம் தாண்டுதல் டி-44, டி-62, டி-64 (இறுதிப் போட்டி-பதக்க சுற்று) - பிரவீன் குமார் - மதியம் 3.21 மணி

பாரா பவர் லிப்டிங்:-

பெண்கள் 67 கிலோ வரை (இறுதிப் போட்டி-பதக்க சுற்று) - கஸ்தூரி ராஜாமணி - இரவு 8.30 மணி

பாரா தடகளம்:-

பெண்களுக்கான ஈட்டி எறிதல் எப்-46 (இறுதிப் போட்டி-பதக்க சுற்று) - பாவனாபென் சவுத்ரி - இரவு 10.30 மணி

பாரா தடகளம்:-

ஆண்கள் ஷாட் புட் எப்-56, எப்-57 (இறுதிப் போட்டி-பதக்க சுற்று) - சோமன் ராணா மற்றும் ஹோகடோ செமா - இரவு 10.34 மணி


Next Story