பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகளின் முழு விவரம்
பாரா ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி களம் காணுகிறது
பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் (இந்திய நேரப்படி):- .
தடகளம்:
பிரீத்தி பால் - பெண்களுக்கான 100 மீ.இறுதிப் போட்டி - மாலை 4.45 மணி .
துப்பாக்கி சுடுதல்:
தேவரட்டி ராமகிருஷ்ணா - கலப்பு 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் தகுதி சுற்று - மாலை 5.00 மணி.
ருத்ரன்ஷ் கண்டேல்வால், மணீஷ் நர்வால் - ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டி- மாலை 5.30 மணி.
பேட்மிண்டன் :
துளசிமதி முருகேசன் - பெண்கள் ஒற்றையர் பிரிவு - இரவு 7.30 மணி.
சிராஜன் சோலைமலை (ஆண்கள் ஒற்றையர் பிரிவு) இரவு 8.30 மணி.
கிருஷ்ணா நாகர் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு - இரவு 10.50 மணி.
சுஹாஸ் யதிராஜ் ,பாலக் கோலி - கலப்பு இரட்டையர் பிரிவு - இரவு 12.10 மணி.
நித்தேஷ் குமார், துளசிமதி முருகேசன் - கலப்பு இரட்டையர் பிரிவு - இரவு 12.10 மணி.
சிவராஜன் சோலைமலை, நித்யா ஸ்ரீ சிவன்- கலப்பு இரட்டையர் பிரிவு -நள்ளிரவு 1.30 மணி.
சைக்கிளிங்:
அர்ஷத் ஷேக். - ஆண்கள் சி2 3,000மீ தனிநபர் இறுதிப் போட்டி - இரவு 7.11 மணி.
வில்வித்தை:
ராகேஷ் குமார் - ஆண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் 1/16 வெளியேற்றுதல் சுற்று - இரவு 7.17 மணி.
ஷியாம் சுந்தர் சுவாமி - ஆண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் 1/16 வெளியேற்றுதல் சுற்று - இரவு 9.50 மணி.
பாரா ஒலிம்பிக் போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் இலவசமாக பார்க்கலாம்.