பாராஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் விவரம்
பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
பாரீஸ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஏறக்குறைய 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த போட்டி தொடர் செப்டம்பர் 8-ம் தேதி உடன் முடிவடைய உள்ளது.
பதக்கப்பட்டியலில் சீனா 43 தங்கம், 30 வெள்ளி, 14 வெண்கலம் என்று மொத்தம் 87 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என்று 15 பதக்கத்துடன் 15-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் 7-வது நாளான இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-
மதியம் 1:00 மணி - பாரா துப்பாக்கி சுடுதல் - - பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் தகுதி சுற்று - மோனா அகர்வால், அவனி லெகாரா (தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி)
மதியம் 2:28 மணி - பாரா தடகளம் - பெண்கள் ஷாட் புட் - இறுதிப்போட்டி - பாக்யஸ்ரீ ஜாதவ்
மதியம் 3:20 மணி - பாரா வில்வித்தை - பெண்களுக்கான தனிநபர் ரிகர்வ் ஓபன் 1/8 எலிமினேஷன் - பூஜா (தகுதிபெற்றால் இரவு 8.30 மணி முதல் நடைபெற உள்ள அடுத்த சுற்று ஆட்டங்களில் இவர் கலந்துகொள்வார்)
இரவு 10:38 மணி - பாரா தடகளம் - பெண்கள் 400 மீட்டர் - இறுதிப் போட்டி - தீப்தி ஜீவன்ஜி
இரவு 11:50 மணி - பாரா தடகளம் - ஆண்கள் உயரம் தாண்டுதல் - T63 இறுதிப்போட்டி - மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், ஷைலேஷ் குமார்
(செப்டம்பர்4) 12:13 இரவு - பாரா தடகளம் - ஆண்கள் ஈட்டி எறிதல் - F46 இறுதிப் போட்டி - அஜீத் சிங், ரிங்கு, சுந்தர் சிங் குர்ஜார்