ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதிக்கு தகுதி


ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதிக்கு தகுதி
x

இந்திய வீரர் ரஜாவத் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஆர்லீன்ஸ்,

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 58-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத், தரநிலையில் 61-வது இடத்தில் இருக்கும் சீனதைபே வீரர் சி யூ ஜென்னை சந்தித்தார்.

44 நிமிடம் நடந்த இந்த மோதலில் பிரியான்ஷூ ரஜாவத் 21-18, 21-18 என்ற நேர்செட்டில் சி யூ ஜென்னை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.


Next Story