ஒலிம்பிக் வில்வித்தை தகுதி சுற்று: இந்திய பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி


ஒலிம்பிக் வில்வித்தை தகுதி சுற்று: இந்திய பெண்கள் அணி அதிர்ச்சி தோல்வி
x

கோப்புப்படம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை கடைசி தகுதி சுற்று துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் நேற்று தொடங்கியது.

அன்டல்யா,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை கடைசி தகுதி சுற்று துருக்கியில் உள்ள அன்டல்யா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் 5-வது இடம் பிடித்த இந்திய அணி நேரடியாக 2-வது சுற்றில் களம் இறங்கியது.

2-வது சுற்றில், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 18-வது இடத்தில் உள்ள உக்ரைனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் தீபிகா குமாரி, பஜன் கவுர், அங்கிதா பகத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-5 என்ற செட் கணக்கில் உக்ரைனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

இந்த பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். ஆனால் இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியதால் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் தரவரிசை அடிப்படையில் இந்திய அணி பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.


Next Story