டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா


டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா
x

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் களம் காணுகிறார்.

புதுடெல்லி,

இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் இன்று நடக்கிறது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் காணுகிறார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜாகுப் வாட்லெஜ் (செக்குடியரசு), உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கேஷோர்ன் வால்காட் (டிரினிடாட் அண்ட் டொபாக்கோ), ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி) ஆகிய முன்னணி வீரர்களும் விளையாட இருப்பதால் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இதே போல் அண்மையில் ஒடிசாவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் 8.41 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்ற கையோடு வந்திருக்கும் இந்திய நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் பங்கேற்க இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story