தேசிய கைப்பந்து போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்


தேசிய கைப்பந்து போட்டி - தமிழக பெண்கள் அணி சாம்பியன்
x

19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழக பெண்கள் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோத்தகிரி,

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் சார்பில், ஆங்கில பள்ளிகளுக்கு இடையே தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தமிழகம், மராட்டியம், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், கேரளா, குஜராத், பஞ்சாப், ஆந்திரா, உத்தரகாண்ட் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன.

பெண்களுக்கான கைப்பந்து இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் கர்நாடகா மாநில அணியை வீழ்த்தி மராட்டிய அணி வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மராட்டிய அணியை வீழ்த்தி கர்நாடகா அணி வெற்றி பெற்றது.

இதைதொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகம்-மராட்டிய அணிகள் மோதின. இதில் தமிழக பெண்கள் அணி சிறப்பாக ஆடி 25-13, 25-18 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்று ஆண்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது.


Next Story