தேசிய விளையாட்டு தினம்: தேதி, வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்


தேசிய விளையாட்டு தினம்:  தேதி, வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்
x

 image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 29 Aug 2023 2:17 PM IST (Updated: 29 Aug 2023 3:03 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

புது டெல்லி,

தேசிய விளையாட்டு தினம்;

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வரலாற்றில் மிகச்சிறந்த ஆக்கி வீரர்களில் ஒருவரான மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது.

தேசிய விளையாட்டு தினம்: முக்கியத்துவம்

தேசிய விளையாட்டு தினத்தை நினைவுகூருவதன் முதன்மை நோக்கம் நாட்டில் இளைஞர்களிடையே விளையாட்டின் மீதான ஈடுபாட்டை வளர்ப்பதாகும்.

இந்த நாளில் தேசிய விளையாட்டு விருதுகள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பல்வேறு விளையாட்டு வீரர்கள், தனிநபர்கள் மற்றும் அணிகள் விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படுகின்றன.

மேலும் தேசிய விளையாட்டு தினம் அன்றாட வாழ்வில் விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் செயல்படுகிறது.

தேசிய விளையாட்டு தினம்: வரலாறு

2012 ஆம் ஆண்டில், இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 29 ஆம் தேதியை நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக அதிகாரப்பூர்வமாக நியமித்தது. 1905 ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்த பிரபல இந்திய ஆக்கி வீரர் மேஜர் தியான் சந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான அங்கீகாரம் 2012ஆம் ஆண்டு கிடைத்தது. அதன்படி இதன் தொடக்க விழா ஆகஸ்ட் 29, 2012 அன்று நடந்தது.

தேசிய விளையாட்டு தினத்தின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

தேசிய விளையாட்டு தினம்: கொண்டாட்டம்

தேசிய விளையாட்டு தினத்தை அனுசரிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒரு விழா நடத்தப்படுகிறது. அங்கு இந்திய அரசு அணிகளுக்கும், தனிப்பட்ட வீரர்களுக்கும் பலவிதமான பாராட்டுகளையும் சிறப்புகளையும் வழங்குகிறது. இந்த வெகுமதிகள் விளையாட்டு துறையில் அவர்கள் செய்த பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்திய ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்குகிறார்.


Next Story