லைவ் அப்டேட்ஸ்; குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்..!
ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
Live Updates
- 27 Sept 2023 8:20 AM IST
துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா, மணினி கவுசிக், ஆஷி சவுக்சி ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று உள்ளது.
- 27 Sept 2023 8:13 AM IST
துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சிப்ட் கவுர் சம்ரா மொத்தம் 594 புள்ளிகளுடன் தகுதி சுற்றை முடித்து உள்ளார். இதனால் புதிய ஒரு தேசிய சாதனை படைத்து உள்ளார்.
அவர், இரண்டாவது இடம் பிடித்து உள்ளார். இந்த பிரிவில், சீனாவின் ஜியா சியு முதல் இடத்தில் உள்ளார். இந்தியா வெள்ளி பதக்கம் வெல்வதற்கான சிறந்த இடத்தில் உள்ளது.
- 27 Sept 2023 7:36 AM IST
தேக்வாண்டோ: இந்தியாவின் ஷிவான்ஷ் தியாகி ஆடவர் 80 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில், கம்போடியா வீரர் மிதோனாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தின சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
- 27 Sept 2023 7:13 AM IST
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், குத்து சண்டை, வாள்வீச்சு, டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
- 27 Sept 2023 7:11 AM IST
ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஆசிய விளையாட்டு போட்டியின் 4-வது நாளான நேற்று நடந்த குதிரையேற்றம் போட்டியில், 'டிரஸ்சேஜ்' அணிகள் பிரிவில் அனுஷ் அகர்வாலா, ஹிரிடாய் விபுல் செடா, திவ்யாகீர்த்தி சிங், சுதிப்தி ஹஜெலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 209.205 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. வீரர், வீராங்கனைகள் குதிரையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அதனை மைதானத்தில் துல்லியமாக அசைந்தும், நளினமாக நடைபோட வைத்தும் அபாரமாக செயல்பட்டதால் இந்தியாவுக்கு இந்த தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றத்தில் 3 தங்கம் வென்ற இந்தியா அதன் பிறகு குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வெல்வது இது முதல்முறையாகும். 41 ஆண்டுக்கு பிறகு இந்தியா மீண்டும் அசத்தி இருக்கிறது. சீனா (204.882 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஹாங்காங் (204.852 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றன.