இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்; விக்டர் ஆக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்; விக்டர் ஆக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்
x

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் ஆடவர் பிரிவு இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான விக்டர் ஆக்சல்சென் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.



ஜகர்த்தா,



இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் ஜகர்த்தா நகரில் நடந்து வருகின்றன. இதில், நடப்பு சாம்பியனான விக்டர் ஆக்சல்சென் மற்றும் சீனாவின் ஜாவோ ஜுன் பெங் விளையாடினர்.

ஒலிம்பிக் சாம்பியனான விக்டர், போட்டி தொடங்கிய 38 நிமிடங்களில் 21-9, 21-10 என்ற செட் கணக்கில் பெங்கை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் இந்தோனேசியன் மாஸ்டர்சில் பெற்ற வெற்றிக்கு பின்னான அவரது 2வது தொடர் வெற்றி இதுவாகும்.

இதனால், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான உலக தர வரிசையில் நாளை முதல் (திங்கட் கிழமை) இந்தியாவின் லக்சயா சென்னை விட முன்னேறி முதல் இடத்திற்கு அவர் செல்கிறார்.

இதேபோன்று மகளிர் பிரிவில் சீன தைபவின் டாய் சூ யிங் அதிரடியாக விளையாடி, சீனாவின் வாங் ஜி யி என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


Next Story