உலக மகளிர் குத்துச்சண்டை: லொவினா பொர்ஹொஹின் சாம்பியன் - இந்தியாவிற்கு 4-வது தங்கம்
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4வது தங்கம் கிடைத்துள்ளது.
டெல்லி,
13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 72 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில், இந்தியாவின் லொவினா பொர்ஹொஹின் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்கரை எதிர்கொண்டார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லோவினா ஆஸ்திரேலிய வீராங்கனை பார்க்கரை 5-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்தார்.
இதன் மூலம் நடப்பு உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 4-வது தங்கம் கிடைத்துள்ளது. முன்னதாக நேற்று நடந்த போட்டியில் 48 கிலோ பிரிவில் இந்தியாவின் நிது கங்காசும், 81 கிலோ பிரிவில் ஸ்வீட்டி போராவும், இன்று நடந்த போட்டியில் 50 கிலோ பிரிவில் நிகாத் ஜரீனும் தங்கம் வென்று சாதனைபடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story