ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி


ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி
x

Image Tweeted By BAI_Media

பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சாத்விக்-சிராக் ஜோடி மீது இந்த தொடரில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

சார்ப்ரூக்கன்,

ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் போட்டிகள் ஜெர்மனி நாட்டின் சார்ப்ரூக்கன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வெண்டி இணையை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சாத்விக்-சிராக் ஜோடி 17-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சாத்விக்-சிராக் ஜோடி மீது இந்த தொடரில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதியில் தோல்வி அடைந்து இருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.


Next Story