பார்முலா1 கார்பந்தய முன்னாள் சாம்பியன் வெட்டல் ஓய்வு பெற முடிவு


பார்முலா1 கார்பந்தய முன்னாள் சாம்பியன் வெட்டல் ஓய்வு பெற முடிவு
x

இந்த சீசனுடன் பார்முலா1 கார்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக செபாஸ்டியன் வெட்டல் அறிவித்துள்ளார்.

புடாபெஸ்ட்,

உலகின் மிகப்பெரிய கார் பந்தயமான பார்முலா1 கார்பந்தய போட்டியில் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர், ஜெர்மனி நாட்டின் செபாஸ்டியன் வெட்டல். 2010-ம் ஆண்டு முதல்முறையாக வாகை சூடிய போது அவரது வயது 23. இதன் மூலம் குறைந்த வயதில் பார்முலா1 கார்பந்தய பட்டத்தை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

அது முதல் 4 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய செபாஸ்டியன் வெட்டல், அண்மை காலமாக வெகுவாக தடுமாறி வருகிறார். இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 12 சுற்றுகளில் ஒரு ஆட்டத்தில் கூட டாப்-5 இடத்திற்குள் வரவில்லை.

இந்த நிலையில் 35 வயதான செபாஸ்டியன் வெட்டல் இந்த சீசனுடன் பார்முலா1 கார்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். நீண்ட யோசனைக்கு பிறகு இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாக கூறியுள்ளார்.


Next Story