சென்னையில் 50 அணிகள் பங்கேற்கும் மாவட்ட கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்
50 அணிகள் பங்கேற்கும் மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
சென்னை,
சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், ஜி.பி.ஆர்.மெட்டல்ஸ் நிறுவனம் ஆதரவுடன் ஆண்களுக்கான 'பி' டிவிசன் கைப்பந்து போட்டி மற்றும் பெண்களுக்கான மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்குகிறார்.
தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க இலாகா கூடுதல் கமிஷனர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கின்றனர். 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜி.எஸ்.டி., ஸ்டேட் வங்கி, லயோலா உள்பட 30 அணிகளும், பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.டி.ஏ.டி., எம்.ஓ.பி.வைஷ்ணவா உள்பட 20 அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு வழங்கப்படும்.