மாவட்ட அளவிலான 'பி' டிவிஷன் கிரிக்கெட் போட்டி-குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி

மாவட்ட அளவிலான ‘பி' டிவிஷன் கிரிக்கெட் போட்டி-குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் குன்னூர் டான் பிராட்மேன் அணி மற்றும் கெந்தொரை கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டான் பிராட்மேன் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 34 ஓவர்கள் மட்டுமே விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் விஸ்வநாதன் 50 ரன்கள், நந்தா 36 ரன்கள் மற்றும் ஜோசப் 30 ரன்கள் எடுத்தனர். கெந்தொரை அணியின் பந்து வீச்சாளர்கள் ரகுராம் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தொடர்ந்து விளையாடிய கெந்தொரை அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர் ராகேஷ் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். டான் பிராட் மேன் அணியின் பந்து வீச்சாளர்கள் செந்தில் 4 விக்கெட்டுகள் மற்றும் ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் குன்னூர் டான் பிராட் மேன் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.