மாவட்ட கிரிக்கெட் போட்டி:குன்னூர் அணி வெற்றி


மாவட்ட கிரிக்கெட் போட்டி:குன்னூர் அணி வெற்றி
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:46 PM GMT)

மாவட்ட கிரிக்கெட் போட்டி:குன்னூர் அணி வெற்றி

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் குன்னூர் டான் பிராட்மேன் அணி மற்றும் கெந்தொரை அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டான் பிராட்மேன் கிரிக்கெட் அணி 35 ஓவர்கள் கொண்ட போட்டியில், 33.5 ஓவர்கள் மட்டுமே விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் செந்தில் 35 ரன்கள், தினேஷ் 33 ரன்கள், ஜோசப் 28 ரன்கள் எடுத்தனர். கெந்தொரை அணியின் பந்து வீச்சாளர் ரகுராம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து விளையாடிய கெந்தொரை அணி 30 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த அணி வீரர்கள் ரகுராம் 30 ரன்கள், ஆகாஷ் 30 ரன்கள் (அவுட் இல்லை) எடுத்தனர். டான் பிராட் மேன் அணியின் பந்து வீச்சாளர்கள் ராஜேஷ் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் குன்னூர் டான் பிராட்மேன் அணி வெற்றி பெற்றது.


Next Story