காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - ஹர்ஜிந்தர் கவுர்


காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் -  ஹர்ஜிந்தர் கவுர்
x

 Image Courtesy: ANI Twitter

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஹர்ஜிந்தர் கவுர் கூறியுள்ளார்.

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான (71 கிலோ) பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் ஸ்நாட்ச் பிரிவில் 93 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 119 கிலோவும் மொத்தம் (119 + 93) மொத்தம் 212 கிலோ தூக்கி அசத்தினார்.

இந்நிலையில் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுர் கூறுகையில்,

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்வேன் என முழு நம்பிக்கையுடன் இருந்தேன். இப்போட்டியில் எனது செயல்திறனில் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் பதக்கம் வென்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்ததாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் எனது முழு கவனத்தையும் செலுத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story