செஸ் ஒலிம்பியாட்: இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
புடாபெஸ்ட்,
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்ல உதவினர்.
திவ்யா, வந்திகா, ஹரிகா, தானியா மற்றும் அபிஜித் (கேப்டன்) ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
Related Tags :
Next Story