செஸ் ஒலிம்பியாட்: 3-வது சுற்றில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி வெற்றி


செஸ் ஒலிம்பியாட்:  3-வது சுற்றில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி வெற்றி
x

சுவிட்சர்லாந்தின் பேபியனை வீழ்த்தி ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டிகளிலும் இந்திய அணி பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இன்றைய போட்டியில் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. அதில் ஆண்கள் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், இன்று செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்றில் இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனை பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே நடந்து முடிந்த 2 சுற்றுகளிலும் நந்திதா வெற்றி பெற்று இருந்தார்.

3 வது சுற்றின் மற்றொரு போட்டியில் இந்திய வீரர் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் பேபியனை வீழ்த்தி ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார். அதே நேரத்தில் இந்தியாவின் சார்பாக மகளிர் சி பிரிவில் விளையாடிய ஈஷாவின் போட்டி டிராவில் முடிந்தது. தொடர்ந்து, இந்தியாவின் பொதுப்பிரிவு ஏ அணியில் விளையாடிய ஹரி கிருஷ்ணா வெற்றிப் பெற்றுள்ளார்.

மேலும், இந்திய பொதுப்பிரிவு சி அணியில் விளையாடிய அபிஜித் குப்தாவும் வெற்றிப் பெற்றுள்ளார். ஐஸ்லாந்து அணி வீரரை எதிர்கொண்டு விளையாடியபோது 36வது நகர்த்தலில் அபிஜித் குப்தா வெற்றி பெற்றார்.


Next Story