மாநில இளையோர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் நாளை மறுநாள் தேர்வு


மாநில இளையோர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் நாளை மறுநாள் தேர்வு
x

மாநில இளையோர் போட்டிக்கான சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் தேர்வு நாளை மறுநாள் எழும்பூரில் நடக்கிறது.

சென்னை,

மாநில இளையோர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட இளையோர் ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணி தேர்வு எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (25-ந் தேதி) பிற்பகல் 3 மணிக்கு

1-1-2002-க்கு பிறகு பிறந்தவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். இந்த அணி தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார்.


Next Story