ஆசிய விளையாட்டு: குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது. தடகள பிரிவு போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் இதுவேயாகும். மகளிர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிரன் பலியான் 17.36 தூரம் வீசி வெண்கலம் வென்றார். தனது மூன்றாவது முயற்சியில் இந்த சாதனை படைத்தார். இதே போட்டியில் சீனாவின் லிஜிஜோ கோங் மற்றும் ஜியாவுன் சாங் ஆகியோர் முறையே 19.58 மற்றும் 18.92 தூரம் வீசி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றனர்.
Related Tags :
Next Story