ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று: அங்குஷிதா, நிஷாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்


ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று: அங்குஷிதா, நிஷாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x

நிஷாந்த் தேவ் (image courtesy: BFI Media)

ஆண்களுக்கான 71 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், தாய்லாந்தின் பீரபட் யேசங்னோனை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

பாங்காக்,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 60 கிலோ எடைபிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக ஜூனியர் சாம்பியனான அங்குஷிதா போரோ (இந்தியா) 4-1 என்ற கணக்கில் ஆசிய சாம்பியன் ரிம்மா வோலோசென்கோவை (கஜகஸ்தான்) சாய்த்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். முன்னதாக 66 கிலோ எடைபிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் பியர்டோ ரிகோவின் ஸ்டெபானி பைனிரோவை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான 71 கிலோ எடைபிரிவில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் பீரபட் யேசங்னோனை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். 92 கிலோவுக்கு அதிகமான எடைபிரிவில் ஆசிய போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் நரேந்தர் பெர்வால் 2-3 என்ற கணக்கில் ஈகுவடாரின் ஜெர்லோன் கில்மார் காங்கோ ஷாலாவிடம் போராடி சரிந்தார்.


Next Story