இங்கிலாந்தில் அனுமதி அட்டை இல்லாததால் தடுத்து நிறுத்தப்பட்ட பயிற்சியாளர் பிரச்சனைக்கு தீர்வு!


இங்கிலாந்தில் அனுமதி அட்டை இல்லாததால் தடுத்து நிறுத்தப்பட்ட பயிற்சியாளர் பிரச்சனைக்கு தீர்வு!
x

மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.

லண்டன்,

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், நேற்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றுள்ள பயிற்சியாளர் சந்தியா குருங் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் குழுவில் அவரது பயிற்சியாளர்களை நுழைய தடை விதித்து அங்குள்ள அதிகாரிகள் தடுத்ததாக வீராங்கனை குற்றம் சாட்டினார்.அவர் பல முறை கேட்டுக்கொண்டும், அவர்கள் சில காரணங்களை மேற்கோள் காட்டி பயிற்சியாளர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதன் காரணமாக தன்னுடைய பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பயிற்சியாளர் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பி விட்டார் எனவும், இத்னால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதை அடுத்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இவ்விவகாரத்தில் தலையிட்டு, வீராங்கனையின் பயிற்சியாளருக்கு உரிய அனுமதி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் அறிவுறுத்தியது.

அதன்படி இன்று வீராங்கனையின் பயிற்சியாளருக்கு உள்ளே நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Next Story