பஜ்ரங் பூனியா மீதான இடைநீக்கம் ரத்து


பஜ்ரங் பூனியா மீதான இடைநீக்கம் ரத்து
x

கோப்புப்படம் 

ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்துக்காக பஜ்ரங் பூனியாவை ஊக்கமருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்தது.

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கடந்த மார்ச் 10-ந்தேதி சோனிபட்டில் நடந்த இந்திய அணித் தேர்வுக்கான தகுதி போட்டியில் தோல்வி அடைந்தார். அப்போது அவரிடம் ஊக்கமருந்து சோதனைக்காக சிறுநீர் மாதிரியை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகள் கேட்ட போது அதை வழங்க மறுத்து விட்டார். இதையடுத்து ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்துக்காக அவரை ஊக்கமருந்து தடுப்பு முகமை இடைநீக்கம் செய்தது. இதை எதிர்த்து அவர் ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியிடம் முறையிட்டார்.

இது குறித்து விசாரித்த ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, அவர் மீதான இடைநீக்க நடவடிக்கையை நேற்று ரத்து செய்தது. அவர் மீது குற்றச்சாட்டு இன்னும் பதிவு செய்யப்படவில்லை. ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு குற்றச்சாட்டுக்கான நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தால், அதன் பிறகு இது குறித்து இறுதி விசாரணை நடத்தப்படும் என்று கமிட்டி அறிவித்துள்ளது.


Next Story