உலக பேட்மிண்டன் போட்டி: தென் கொரிய வீராங்கனை ஆன் சே யங் சாம்பியன்

Image Courtesy : @bwfmedia twitter
கரோலினா மரினை வீழ்த்தி அன் சே யங் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
ஹோபன்ஹேகன்,
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் முன்னணி வீராங்கனை கரோலினா மரினுடன் தென் கொரிய வீராங்கனை அன் சே யங் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-12, 21-10 என்ற நேர்செட்களில் கரோலினா மரினை வீழ்த்தி அன் சே யங் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் போட்டியில் முதல் முறையாக பெண்கள் ஒற்றையர் பிரிவில் தென் கொரியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று அன் சே யங் சாதனை படைத்துள்ளார்.
Related Tags :
Next Story