ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: காலிறுதி சுற்றில் இந்திய வீரர் பிரனாய்  தோல்வி
x

இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரனாய், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 19-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் பிரனாய் ஆஸ்திரேலிய ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார்.


Next Story