ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி


ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி
x

லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

டெக்ரான்,

8 அணிகள் இடையிலான 14-வது ஆசிய ஜூனியர் (18 வயதுக்கு உட்பட்டோர்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 25-23, 25-20, 25-21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றதுடன், தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொள்கிறது.


Next Story